ஆஞ்சநேயர் மூல மந்திரம் : ஆஞ்சநேய காயத்ரி மந்திரம் pdf

Anjaneyar mantra in tamil pdf, Hanuman mantra benefits

அனுமன் மூல மந்திரம்:

அனுமன் மூல மந்திரம்
அனுமன் மூல மந்திரம்


“ஹங் ஹனுமதே
ருத்திராத்மஹெ ஹுங் பட்”

அனுமன் காயத்ரீ:

ஆஞ்சநேய காயத்ரி மந்திரம் pdf
ஆஞ்சநேய காயத்ரி மந்திரம் pdf

ஓம் ஆஞ்ஜனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி |
தன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்||

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றோ அல்லது அவரை மனத்தில் நினைத்துக் கொண்டு, 108 முறை ஜெபம் செய்ய, சனி பகவானின் தீய தாக்கங்கள் குறைந்து, உடலும், மனமும் மிகுந்த சக்தி பெரும்

ஆஞ்சநேயரை வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள் :-.

ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர்.

Download Now

"ராமா" என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.

 அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து,  வெண்ணெய் சார்த்தி, ஆராதிக்க வேண்டும்.

TAKE A LOOK AT HANUMAN DHANDAKAM & CHALISA LYRICS

அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம்.  அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன.

ஆஞ்சநேயரை அவருக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக அஷ்டம சனி, ஜென்ம சனி, ஏழரை நாட்டு சனி போன்ற அனைத்து சனி தோஷங்களின் கடுமை தன்மை குறைந்து, நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். பெருமாளின் அருள் முழுமையாக கிடைக்கும். உடல் வலிமையும், மன தைரியமும் அதிகரிக்கும். துஷ்ட சக்தி பாதிப்புகள் மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். எதிரிகள் தொல்லை, திடீர் ஆபத்துக்கள் உண்டாகாமல் காக்கும். கல்வியில் சிறந்த தேர்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் நஷ்ட நிலை நீங்கி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து லாபங்கள் பெருகும். தரித்திரம், வறுமை நிலை அறவே நீங்கும்.

ஹனுமான் வழிபாட்டிற்குரிய தினங்கள்

சக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ ஹனுமான் மிக சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துவார்.

Post a Comment

0 Comments